- திமுக
- முதல் அமைச்சர்
- அமைச்சர்
- ச. நாசர்
- ஆவடி
- மாவட்ட செயலாளர் அமைச்சர்
- ஆவடி எஸ்.எம்.நாசர்
- திருவள்ளூர் மத்திய மாவட்டம்
- எம். ஸ்டால்
- நாசர்
ஆவடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை குறித்து திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடப்பதாக மாவட்டச் செயலாளர் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் நாசர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை குறித்து திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் மா.ராஜி தலைமையில் பட்டாபிராம் தண்டரை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
இக்கூட்டத்திற்கு மாநில ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளரும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.ஜெ.ரமேஷ், மாநில மாணவரணி இணைச் செயலாளர் ஜெரால்டு, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பிரபு கஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் சீனிவாசன், ஜெயபாலன், காயத்திரி ஸ்ரீதர், மாவட்ட பொருளாளர் நரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் எத்திராஜ், ராஜேந்திரன், விமல்வர்ஷன், முத்தமிழ்செல்வன், வி.குமார், மகாதேவன், காஞ்சனா சுதாகர் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். இதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.
The post முதல்வர் வருகையையொட்டி இன்று திமுக அவசர ஆலோசனை கூட்டம்: அமைச்சர் சா.மு.நாசர் தகவல் appeared first on Dinakaran.