- GST கவுன்சில் கூட்டம்
- ஜெய்சால்மர்
- 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
- ஜெய்சல்மர், ராஜஸ்தான்
- மத்திய நிதி அமைச்சர்
- நிர்மலா சீதாராமன்
- 54 வது ஜிஎஸ்டி சபை கூட்டம்
- தில்லி
- தின மலர்
ஜெய்சால்மர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. கடந்த செப்டம்பரில் ெடல்லியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 54வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி தொடர்பான விவகாரங்களை முழுமையாக ஆராய்வதற்கு, பீகார் மாநில துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையில் 13 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவை ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்தது.
இந்தக் குழு ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி விகிதத்தை மறுஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், அந்தக் காப்பீடுகளுக்கான தவணை தொகை மீதான ஜிஎஸ்டியை குறைப்பது குறித்து, அடுத்து வருகிற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மருத்துவக் காப்பீடுகளுக்கான தவணை தொகை மீதான ஜிஎஸ்டியை குறைப்பது குறித்தும், விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், காலணிகள் மீதான ஜிஎஸ்டியை அதிகரிப்பது உள்பட சுமார் 148 பொருள்கள் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை மாற்றியமைப்பது, ஜிஎஸ்டி வரம்புக்குள் விமான எரிபொருளை கொண்டுவருவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்புகள் இன்று மாலை ஒன்றிய நிதியமைச்சர் அறிவிப்பார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
The post ஆயுள், மருத்துவ காப்பீடுக்கான வரி குறைக்கப்படுமா..? ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை appeared first on Dinakaran.