×
Saravana Stores

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான அஸ்வத்தாமன் மீதான குண்டாஸ் நடவடிக்கையை எதிர்த்து அவரது தாய் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமன் மீதான குண்டாஸ் நடவடிக்கையை எதிர்த்து அவரது தாய் வழக்கு தொடர்ந்த நிலையில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டார். பிறகு செப்டம்பர் 19ஆம் தேதி குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். இந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி அஸ்வத்தாமனின் தாய் விசாலாட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

மனதை செலுத்தாமல் இயந்திரத்தனமாக தனது மகனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஸ்வத்தாமனை குண்டர்சட்டத்தில் சிறையில் அடைத்தது குறித்து தனக்கும் , அவரது மனைவிக்கும் தெரிவிக்கவில்லை என்றும் உரிய காலத்தில் இந்த உத்தரவு மற்றும் ஆவணங்கள் அஸ்வத்தாமனிடம் உரிய நேரத்தில் வழங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அதே போல், பூந்தமல்லி கிளை சிறையில் அஸ்வத்தாமன் அடைக்கப்பட்டுள்ள நிலையில் புழல் சிறைக்கு இந்த உத்தரவு அனுப்புவது முறையற்றது என்றும் பொது அமைதிக்கு எந்த ஒரு பங்கம் விளைவிக்காத தனது மகன் மீது வேண்டும் என்றே ஒரு குண்டர்சட்டம் போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்கு பின்னணியாக இருந்தவர்களை திருப்திபடுத்தும் நோக்கத்தில் மட்டுமே தன்னுடைய மகன் புகழுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் தற்போது குண்டர்சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது இது தொடர்பாக இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளர், சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

The post ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான அஸ்வத்தாமன் மீதான குண்டாஸ் நடவடிக்கையை எதிர்த்து அவரது தாய் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kundas ,Aswathaman ,Armstrong ,iCourt ,Tamil government ,Chennai ,Chennai High Court ,Gundas ,Tamil Nadu ,Bagajan Samaj Party ,Ashwatman ,Aycourt ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் வழக்கு: குண்டர் சட்டத்தை எதிர்த்து மனு