கோவை: மகன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டார். இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மகனும், அக்கட்சியின் இளைஞர் அணி தலைவருமான ஓம்கார் பாலாஜி வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனை கண்டித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் நேற்று கோவை கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்று ஆர்ப்பாட்டம் செய்ய ஊர்வலமாக சென்றனர்.
அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் அவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அர்ஜூன் சம்பத் உட்பட 230 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோவையில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். வேலைவாய்ப்பு குறித்த மீட்டிங் இருப்பதாக கூறி தலைக்கு ரூ.200 கொடுத்துஅர்ஜூன் சம்பத் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக கல்லூரி மாணவர்களும் அழைத்து வரப்பட்டுள்ளனர். பின்னர் மாணவர்களை வேனில் ஏற்றியபோது செய்வதறியாது திகைத்தபடி நின்றனர்.
The post மகன் கைது செய்யப்பட்டதை கண்டித்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் அர்ஜூன் சம்பத் கைது: கூட்டத்தை சேர்க்க வேலைவாய்ப்பு மீட்டிங் என்று கல்லூரி மாணவர்களை அழைத்து வந்து காமெடி appeared first on Dinakaran.