×

சாத்தூர் நகர் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரம்

சாத்தூர், நவ.17: சாத்தூர் நகர் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குடியிருப்பு,மற்றம் வணிக நிறுவனங்கள் முன்பு நிறுத்தி வைக்கபட்டிருக்கும் இரு சக்கர வாகனங்களை மர்ம நபர்கள் அடிக்கடி திருடி சென்றனர். நகர் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு சில இடங்களில் மட்டும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினர்.

அதில் பதிவாகும் காட்சிகளை வைத்து குற்றவாளிகளை கண்டுபிடித்து வந்தனர். மேலும் பழை கேமராவில் பதிவாகும் பதிவுகளில் உருவங்கள் தெளிவாக இல்லாமல் இருந்ததால் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் போலீசார் திணறி வந்தனர். ஆகவே தற்போது நவீன கேமராக்களை சாத்தூர் நகர் போலீசார் முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post சாத்தூர் நகர் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Chaturnagar ,Chathur ,Chathur Nagar ,Dinakaran ,
× RELATED சாத்தூரில் சாலையில் சுற்றும் மாடுகளால் விபத்து: கட்டுப்படுத்த கோரிக்கை