×

சூலூர் போலீசார் விசாரணை புதிய நிர்வாகிகள் தேர்வு

சோமனூர்,நவ.17: சோமனூர் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று புதிய நிர்வாகிகளுக்கு பட்டயம் கட்டும் விழா நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்கார பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கணபதி ஹோமம் நடைபெற்றது. இதையடுத்து புதிய நிர்வாகிகளான விளம்பர ராமசாமி,சுப்பிரமணியம், பொன்னுச்சாமி உள்ளிட்ட புதிய நிர்வாகிகளுக்கு பட்டயம் கட்டி பதவி ஏற்பு விழா நடத்தப்பட்டது. மதியம் சிறப்பு பூஜை முடிந்ததும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கோவில் கமிட்டி தலைவர் நடராஜ்,நிர்வாக குழுஉறுப்பினர்கள்,ஊர் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post சூலூர் போலீசார் விசாரணை புதிய நிர்வாகிகள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Sullur police ,Somanur ,Ramalinga Choudeswari Amman ,Ganapathi Homam ,Akada Ramasamy ,Subramaniam ,Ponnuchami ,
× RELATED ஊரக வளர்ச்சித்துறை சங்க நிர்வாகிகள் தேர்வு