×

எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்

 

கோவை, டிச. 4: கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே இந்திய ஆயுள் காப்பீட்டு முகவர்கள் சம்மேளனம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்ட பொருளாளர் சந்திரசேகரன் வரவேற்றார். கோட்ட தலைவர் குமணன் தலைமை வகித்தார். இதில், பாலிசிதாரர்களின் போனஸ் உயர்த்த வேண்டும். கடன் வட்டியை குறைக்க வேண்டும். பாலிசி மீதான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும். முகவர்களின் பழைய கமிஷன் முறையை தொடர வேண்டும்.

பாலிசி பிரிமியத்தை குறைக்க வேண்டும். பாலிசி நுழைவு வயதினை 65ஆக உயர்த்த வேண்டும். நேரடி முகவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கோவை கோட்ட செயலாளர் ராமசாமி, லியாபி அகில இந்திய செயற்குழு உறுப்பினர் முருகானந்தம், கோவை கோட்ட துணைத்தலைவர் ராமசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Coimbatore South Taluk ,Life Insurance Agents Association of India ,District Treasurer ,Chandrasekaran ,Divisional President ,Kumanan ,LIC Agents ,Dinakaran ,
× RELATED ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடுவதாக...