- அப்பநாயக்கன்பாளையம் அரசு பள்ளி
- கோயம்புத்தூர்
- கோவை நேரு விளையாட்டு அரங்கம்
- பள்ளி கல்வித் துறை
- அப்பநாயக்கன்பாளையம் அரசு பள்ளி
- தின மலர்
கோவை, டிச. 3: கோவை நேரு விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டிகள் நேற்று நடந்தது. இப்போட்டிகளில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 120 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், 14 வயது, 17 வயது, 19 வயது ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. பெண்கள் பிரிவில் வால்ட், அன்ஈவன்பார், பேலன்சிங், புளோர் ஆகியவையும், ஆண்களுக்கு வால்ட், ரோமன்ரிங், ஐ-பார், சம்மல்ஆர்ட், பேரல்பார், புளோர் என 6 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.
இப்போட்டியில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை அப்பநாயக்கன்பாளையம் வெங்கடேஸ்வர அரசு மேல்நிலைப்பள்ளி பிடித்தது. வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடமும், பயனீயர் மில்ஸ் பள்ளி மூன்றாம் இடமும் பிடித்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆனந்தன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் ஆகியோர் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.
The post மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி அப்பநாயக்கன்பாளையம் அரசு பள்ளி முதலிடம் appeared first on Dinakaran.