×

வடகொரியாவில் வெடிகுண்டு டிரோன்கள் சோதனை

சியோல்: அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று நாடுகள் இணைந்து சர்வதேச கடல் பகுதியில் ஒருங்கிணைந்த ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. வடகொரியாவிற்கு எதிரான தங்களது பலத்தை வெளிப்படுத்தும் வகையில், விமானம் தாங்கி கப்பல் உள்ளிட்டவற்றையும் பயிற்சியில் பங்கேற்க செய்துள்ளன. இதற்கு பதிலடி தரும் வகையில் வடகொரியா நேற்று வெடிகுண்டு டிரோன்களை சோதனை செய்து பார்த்தது.

இந்த டிரோன்கள் இலக்குகளை சென்றடைந்தவுடன் வெடித்து சிதறும் தன்மை கொண்டவையாகும். இந்த டிரோன்கள் பல்வேறு வழிகளில் பறந்து சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கியுள்ளன. மேலும் வடகொரிய அதிபர் கிம் ஆயுத உற்பத்தியை அதிகரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இரண்டு வகையான டிரோன்களுடன் அதிபர் கிம் நிற்கும் புகைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

The post வடகொரியாவில் வெடிகுண்டு டிரோன்கள் சோதனை appeared first on Dinakaran.

Tags : North ,SEOUL ,US ,South Korea ,Japan ,North Korea ,Dinakaran ,
× RELATED எதிர்க்கட்சிகள் நெருக்கடியால் அதிபர்...