×

பசுபதிபாளையம் அருகே போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

கரூர், நவ. 14: கரூர் பசுபதிபாளையம் அருகே போதை தரக்கூடிய வலி நிவாரண மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வரவழைத்து விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் தொழிற்பேட்டை அருகே ஒரு சிலரால் போதை தரக்கூடிய வலி நிவாரண மாத்திரைகள் ஆன்லைன் மூலம் வரவழைத்து விற்பனை செய்வதாக பசுபதிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த பகுதியில் பதுக்கி வைத்து போதை தரக்கூடிய வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்ததாக வெங்கமேடு மற்றும் பசுபதிபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த கவுதம், சஞ்சித் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1000 மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

The post பசுபதிபாளையம் அருகே போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Pashupathipalayam ,Karur ,Karur Pashupathipalayam ,Karur District ,Pasupathipalayam Industrial Estate ,Pasupathipalayam ,Dinakaran ,
× RELATED கரூர் பேருந்து நிலையத்தில் கூடுதலாக ஷேர் ஆட்டோக்கள் இயக்க வேண்டும்