×
Saravana Stores

வேளாண் விற்பனை கண்காட்சி ஆர்வமுடன் பார்த்த விவசாயிகள்

 

கரூர், நவ. 30: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான வேளாண் விற்பனை கண்காட்சியை விவசாயிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு தங்கள் பிரச்னைகளை முன் வைத்தனர்.

இந்நிலையில், விவசாயிகள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைபராமரிப்புத் துறை போன்ற பல்வேறு துறைகளின் சார்பில் விளக்க கண்காட்சியும் இடம் பெற்றிருந்தன. இதனை குறைதீர் நாள் கூட்டத்திற்கு வந்திருந்த அனைத்து விவசாயிகளும் ஆர்வத்துடன் பார்வையிட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post வேளாண் விற்பனை கண்காட்சி ஆர்வமுடன் பார்த்த விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Karur ,Farmers' Grievance Day ,Dinakaran ,
× RELATED மாட்டுச் சந்தைகளில் அடிப்படை வசதி ஏற்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்