×
Saravana Stores

கரூர் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

 

கரூர், நவ. 30: கரூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடுமுதலமைச்சர் சுதந்திர தினவிழா உரையில், ‘‘பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்” என அறிவித்தார்.

முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B.Pharm /D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில்முனைவோர் 30.11.2024 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என 21.11.2024 தேதி நாளிதழ்களில் அறிவித்திருந்த நிலையில் தற்போது பொதுமக்கள் நலன் கருதி 05.12.2024 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post கரூர் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Karur ,Karur Regional Co-operative Societies' ,Joint Director ,Kandaraja ,Tamil Nadu ,Chief Minister ,Independence Day ,
× RELATED கரூர் மாவட்டத்தில் முதியோர்,...