×

கோடம்பாக்கம் பகுதியில் 3 நாளில் திருமணம் நடக்க இருந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை

சென்னை, நவ.13:கோடம்பாக்கம் பிரதீஸ்வரர் காலனி 2வது தெருவை சேர்ந்தவர் சந்தியா (27). இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன், உறவினர் பரத் என்பவருடன் திருமணம் நடந்தது. இருவருக்கும் குழந்தைகள் இல்லாததால் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த 3 வருடங்களாக கணவனை பிரிந்து சந்தியா தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். மகளுக்கு, இளம் வயது என்பதால், சந்தியாவுக்கு இரண்டாவதாக சிவா என்பவருடன் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர்.

அதன்படி, இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, வரும் 17ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. இரு வீட்டாரும் திருண அழைப்பிதழ் அடித்து உறவினர்களுக்கு கொடுத்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சந்தியா வீட்டில் உள்ளவர்கள் திருமணத்திற்கு தேவையான துணிகள் வாங்க கடைக்கு சென்றுவிட்டு, இரவு வீட்டிற்கு வந்தனர். அப்போது சந்தியாவின் அறைக்கு சென்று பார்த்த போது, அவர், தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே சம்பவம் குறித்து வடபழனி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன்படி போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இளம்பெண் தற்கொலை தொடர்பாக வழக்கு பதிந்து, சந்தியா செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.

The post கோடம்பாக்கம் பகுதியில் 3 நாளில் திருமணம் நடக்க இருந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kodambakkam ,Chennai ,Sandhya ,2nd Street, Pratheeswarar Colony, Kodambakkam ,Bharat ,Dinakaran ,
× RELATED கோடம்பாக்கம் மயானபூமி பராமரிப்பு பணி காரணமாக மூடல்