×

ஆம்ஸ்ட்ராங் கொலை கைதி மருத்துவமனையில் அனுமதி

தண்டையார்பேட்டை, நவ.13: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில், கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி கைது செய்யப்பட்ட செல்வராஜ் (50), என்பவர் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டார் அவருக்கு சிறுநீரகத்தில் கல் இருப்பதாக மருத்துவர்கள் கூறியதன் பெயரில் நேற்று ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். இங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, பின்னர் கைதிகளுக்கான வார்டில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை கைதி மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Thandaiyarpet ,president ,Bahujan Samaj Party ,Selvaraj ,Poontamalli ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27...