×
Saravana Stores

மழைக்கால நோய்களை தடுப்பது எப்படி? மாணவர்களுக்கு மருத்துவ அலுவலர் விளக்கம்

குளச்சல், நவ.13: அம்மாண்டிவிளை அருகே உரப்பனவிளை சரோஜினி நினைவு உயர்நிலைப் பள்ளியில் மழை காலத்தில் பரவும் வைரஸ் நோய்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் செல்வி தலைமை வகித்தார். வெள்ளிச்சந்தை ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலர் அனிதா மழைக்காலத்தில் ஏற்படும் வைரஸ் நோய்கள் குறித்தும் முக்கியமாக டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாணவர்களுக்கு சித்த மருத்துவத்தில் கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் மற்றும் வாழ்க்கை முறைகளை பற்றி எடுத்து கூறினார். தொடர்ந்து டெங்கு தடுப்பு குறித்து மாணவர்களிடையே பேச்சு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வைரஸ் நோய்களிலிருந்து தற்காத்து கொள்ளும் சித்த மருத்துவ வழிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post மழைக்கால நோய்களை தடுப்பது எப்படி? மாணவர்களுக்கு மருத்துவ அலுவலர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Kulachal ,Urappanavilai Sarojini Memorial High School ,Ammandivilai ,Silver ,Dinakaran ,
× RELATED மின்னல் தாக்கி உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம்