×

வெள்ளபுத்தூர் ஊராட்சியில் கிராம வளர்ச்சி ஆணையர் ஆய்வு

மதுராந்தகம்: வெள்ளபுத்தூர் ஊராட்சியில் கிராம வளர்ச்சி ஆணையர் ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் வெள்ளபுத்தூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியானது தமிழக அளவிலும் தேசிய அளவிலும் பல்வேறு விருதுகளை பெற்ற ஊராட்சியாக திகழ்ந்து வருகிறது. இதில், குறிப்பாக நீர் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை, சுகாதாரம், மரக்கன்றுகள் வளர்ப்பு, மரம் வளர்ப்பு போன்ற பல துறைகளில் முன்னணியில் திகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக மற்ற ஊராட்சிகளுக்கு இந்த ஊராட்சி முன்மாதிரி ஊராட்சியாகவும், கற்றல் மையமாகவும் விளங்கி வருகிறது. இதனால் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஊராட்சி நிர்வாகிகள் இந்த ஊராட்சியில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு தங்கள் பகுதிகளில் மேற்கொள்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று பயிற்சி கிராம வளர்ச்சி ஆணையர் அனந்தகுமார், வெள்ளபுத்தூர் ஊராட்சியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நீர் மேலாண்மை, நாற்றங்கால் பண்ணை மற்றும் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி மையத்தை ஆய்வு மேற்கொண்டார். பின்பு, சிஆர்ஐ முறையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்நிகழ்வில், ஊராட்சிகள் உதவி இயக்குனர் குமார், அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானப்பிரகாசம், உதவி பொறியாளர் வசந்தி, வட்டார மேற்பார்வையாளர் கண்ணன் ஊராட்சி மன்ற தலைவர் வரதன், துணை தலைவர் விஜயகுமார், ஊராட்சி செயலர் ராஜசேகர் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் பிரபாவதி, பாக்கியலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post வெள்ளபுத்தூர் ஊராட்சியில் கிராம வளர்ச்சி ஆணையர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Vellaputhur Panchayat ,Madhurandakam ,Chengalpattu district ,Achirpakkam ,Tamilnadu ,
× RELATED ஒரு பீர்பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.20 ;...