×

அருப்புக்கோட்டையில் கூடுதல் காவல்நிலையங்களை அமைக்க வேண்டுகோள்

அருப்புக்கோட்டை, நவ.12:அருப்புக்கோட்டையில் கூடுதல் காவல்நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அருப்புக்கோட்டை நகரத்தில் 36 வார்டுகள் உள்ளன. அதனை ஒட்டி பாளையம்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி காந்திநகர் ஆகிய ஒன்றிய பகுதிகளிலும் அதிக வார்டுகள் உள்ளன. இந்நிலையில் அருப்புக்கோட்டையில் நகர் காவல் நிலையம், தாலுகா காவல் நிலையம் என இரண்டு காவல் நிலையங்கள் உள்ளன.

இதில் அருப்புக்கோட்டை நகர்காவல்நிலைய கட்டுப்பாட்டில் அருப்புக்கோட்டை நகராட்சி பகுதியும், பாலையம்பட்டி, கோபாலபுரம், ஆகிய ஊராட்சிகளும் உள்ளது. இந்நிலையில் நகர பரப்பளவு அதிகமானதாலும், நாளுக்குநாள் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக வீடுகள் பெருகி வருவதாலும் குற்றச்சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

மேலும் நகர் காவல் நிலையத்தில் போதிய காவலர்கள் பற்றாக்குறை இருப்பதால் போலீசார் ரோந்து பணியில் சரிவர ஈடுபட முடியவில்லை. இதனால் அடிக்கடி திருட்டு மற்றும் குற்றச்சம்பவங்கள் நடக்கின்றன. விருதுநகர், ராஜபாளையம் போன்று அருப்புக்கோட்டையில் மேலும் ஒரு கூடுதல் காவல் நிலையம் அமைத்து கூடுதலாக காவலர்களை நியமித்தால் அருப்புக்கோட்டையில் தொடர்ந்து நடைபெற்று வரும் குற்ற சம்பவங்களை தடுக்க முடியும். எனவே அருப்புக்கோட்டையில் கூடுதல் காவல்நிலையம் அமைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அருப்புக்கோட்டையில் கூடுதல் காவல்நிலையங்களை அமைக்க வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Aruppukkottai ,Palayampatti ,Ganchanayakanpatti Gandhinagar ,
× RELATED கால்வாயில் உடைப்பு: 2,000 ஏக்கர் பயிர்கள் சேதம்