×

கற்போர்க்கு எழுத்தறிவு தேர்வு

மல்லசமுத்திரம், நவ.12: எலச்சிபாளையம் ஒன்றியத்தில், பாரத எழுத்தறிவு திட்டத்தில் பயிலும் கற்போர்க்கு எழுத்தறிவு தேர்வு நடந்தது. எலச்சிபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 63 தொடக்கப்பள்ளிகளில் நேற்று பாரத எழுத்தறிவு திட்டத்தில் பயிலும் கற்போர்க்கு எழுத்தறிவு தேர்வு நடைபெற்றது. இதில், 192 ஆண்கள் மற்றும் 655 பெண்கள் என மொத்தம் 847 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். எலச்சிபாளையம் மையத்தில் நடைபெற்ற தேர்வினை வட்டார கல்வி அலுவலர் ராஜவேல் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் மகாலிங்கம் ஆகியோர் பார்வையிட்டனர்.

The post கற்போர்க்கு எழுத்தறிவு தேர்வு appeared first on Dinakaran.

Tags : Mallasamutram ,Elachipalayam Union ,
× RELATED கடைகளில் பிளாஸ்டிக் கேரிபேக் பறிமுதல்