×

2வது டி20 போட்டி: இங்கிலாந்து அணியிடம் வெ.இண்டீஸ் சரண்டர்; ஜாஸ் பட்லர் சரவெடி

பிரிட்ஜ்டவுன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணியின் ஜாஸ் பட்லர் அதிரடியாக ஆடி 83 ரன் குவித்தார். இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் இடையில் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. ஏற்கனவே முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வென்ற நிலையில், நேற்று முன்தினம் இரவு பார்படோஸ் தீவின் பிரிட்ஜ்டவுன் நகரில், 2வது டி20 நடந்தது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அணியின் கேப்டன் ரோவ்மேன் பவல் 43, ரொமாரியோ ஷெப்பர்ட் 22 ரன் எடுத்தனர்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக் இழப்புக்கு 158 ரன் எடுத்தது. இங்கிலாந்தின் சகீப் மஹ்மூத், நியம் லிவிங்ஸ்டோன், டேன் மவுஸ்லி தலா 2 விக் வீழ்த்தினர். பின், 159 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. முதல் போட்டியில் சதமடித்து அதிரடி காட்டிய பில் சால்ட் டக்அவுட் ஆனார். இருப்பினும், வில் ஜேக்ஸ் 38, ஜாஸ் பட்லர் 83, அதிரடியாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். இறுதியில் 3 விக் இழப்புக்கு 161 ரன் எடுத்து, 7 விக் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதன் மூலம், 2-0 என்ற புள்ளிக் கணக்கில் அந்த அணி முன்னிலை பெற்றுள்ளது.

The post 2வது டி20 போட்டி: இங்கிலாந்து அணியிடம் வெ.இண்டீஸ் சரண்டர்; ஜாஸ் பட்லர் சரவெடி appeared first on Dinakaran.

Tags : 2nd T20 Match ,West Indies ,England ,Joss Buttler ,Bridgetown ,Jos Buttler ,West Indies… ,Joss Buttler Saravedi ,Dinakaran ,
× RELATED ஒரு நாள் தொடர் இன்று துவக்கம்...