×

அரை இறுதியில் மோதுவது யார்? மல்லுக்கு நிற்கும் 4 அணிகள்: இன்று புரோ கபடி நாக் அவுட் போட்டிகள்

புனே: புரோ கபடி 11வது லீக் முதற்கட்ட போட்டிகள் 12 அணிகள் இடையே, கடந்த அக். 18ம் தேதி ஐதராபாத்தில் துவங்கி நடந்து வந்தன. 2ம் கட்ட லீக் போட்டிகள் நொய்டாவிலும், 3ம் கட்ட லீக் போட்டிகள் புனேவிலும் நடந்தன. லீக் ஆட்டங்கள் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தன. அணிகள் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் முதல் இரு இடங்களை பெற்ற அரியானா ஸ்டீலர்ஸ், தபாங் டெல்லி அணிகள் நேரடியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றன. புள்ளிப் பட்டியலில் 3 முதல் 6 இடங்களை பிடித்த உ.பி யோத்தாஸ், பாட்னா பைரேட்ஸ், யு மும்பா, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. இதையடுத்து, புனே நகரில் இன்று நடக்கும் நாக் அவுட் போட்டிகளில் உ.பி. யோத்தாஸ் – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகளும், பாட்னா பைரேட்ஸ் – யு மும்பா அணிகளும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் இரு அணிகள், ஏற்கனவே தகுதி பெற்றுள்ள அரியானா, டெல்லி அணிகளுடன் அரை இறுதியில் மோதும்.

The post அரை இறுதியில் மோதுவது யார்? மல்லுக்கு நிற்கும் 4 அணிகள்: இன்று புரோ கபடி நாக் அவுட் போட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Mal ,Pro Kabaddi ,Pune ,Hyderabad ,Noida ,Pro ,Kabaddi ,Dinakaran ,
× RELATED புரோ கபடி லீக் தொடரில் 5வது அணியாக...