×

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்

சிவகங்கை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்கள் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறவுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கை மாவட்டத்தில் 1.1.2025ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்கள் வருகிற 16.11.2024, 17.11.2024, 23.11.2024, 24.11.2024 ஆகிய நாட்களில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறவுள்ளது.

முகாம் நடைபெறும் நாட்களில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக நேரடியாகவோ அல்லது https://elections.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிட்ட கால அட்டவணைப்படி 28.11.2024 வரை சிவகங்கை, தேவகோட்டை ஆர்டிஓ அலுவலகங்களிலும் மற்றும் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம். எனவே, இந்த வாய்ப்பினைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Collector ,Asha Ajith ,Sivagangai district ,Dinakaran ,
× RELATED நாளை படைவீரர் குறைதீர் கூட்டம்