×
Saravana Stores

6 நாட்களுக்கு பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

பெரியகுளம்: நீர்வரத்து சீரானதால் ஆறு நாட்களுக்கு பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த அருவிக்கு மழைக்காலங்களில் வட்டக்காணல், பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நீர்வரத்து இருக்கும்.

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க கடந்த 3ம் தேதி வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்து அருவிக்கு வரும் நீர்வரத்து சீரானதால் அருவியில் குளிக்க தேவதானப்பட்டி வனச்சரகர் அன்பழகன் நேற்று அனுமதி வழங்கினார். ஆறு நாட்களுக்கு பிறகு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post 6 நாட்களுக்கு பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kumpakkari Baru ,Beriyakulam ,Kumbakkari Lake ,Kumbakarai grove ,Peryakulam ,Theni ,Kumpakari Lake ,Dinakaran ,
× RELATED தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு கும்பக்கரை அருவியில் குளிக்க தடை