சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.12.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. கோவை அடுத்த துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் லாட்டரி அதிபர் மார்ட்டின். தொழில் அதிபரான இவர் ஓட்டல், ரியல் எஸ்டேட், லாட்டரி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். தமிழ்நாட்டில் முக்கிய தொழில் அதிபரான இவருக்கு சொந்தமான இடங்களில் அடிக்கடி ஐடி, ஈடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
தமிழகம், மேற்கு வங்கம், கர்நாடகா, உத்தரபிரதேசம், மேகாலயா, பஞ்சாப் மாநிலங்களில், மார்ட்டின் தொடர்புடைய 22 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.12.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. லாட்டரி அதிபர் மார்ட்டினின் வங்கிக் கணக்கில் உள்ள வைப்புத் தொகை ரூ.6.42 கோடியை முடக்கியது. மேலும் பல்வேறு முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்கிம் மாநிலத்தில் கடந்த 2009 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் அரசின் லாட்டரி சீட்டுகளை தொழிலதிபா் மாா்ட்டின் அச்சடித்து விற்பனை செய்ததில் பல கோடி ரூபாயை முறைகேடாக ஈட்டியதாகவும், அதை நாடு முழுவதும் சுமாா் 40 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும் எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரிகாரிகள் தெரிவித்தனர்.
The post லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.12.41 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை தகவல் appeared first on Dinakaran.