×
Saravana Stores

கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு குற்றாலம் விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு

தென்காசி: குற்றாலத்தில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு இன்று காலை ஏராளமான பெண்கள் அரசமரத்துடன் கூடிய விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். குற்றாலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கணவர் நீண்ட ஆயுளோட வாழ வேண்டியும், கன்னிப் பெண்கள் திருமணம் தடை இல்லாமல் நடைபெற வேண்டியும், குழந்தை பாக்கியம் பெறவும் பெண்கள் சிறப்பு வழிபாடு மேற்கொள்வது வழக்கம்.

இந்த ஆண்டு இன்று கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான பெண்கள் குற்றாலம் மெயின் அருகில் குற்றாலநாதசுவாமி திருக்கோவில் அருகில் உள்ள அரசமரத்துடன் கூடிய செண்பக விநாயகர் கோவிலில் 11 முறை சுற்றி வலம் வந்து பின்னர் பிரகாரத்தில் உள்ள நாக தேவதைகளுக்கு பால், பழம், மஞ்சள் பொடி வைத்து கற்பூரம் ஏற்றி சிறப்பு பூஜைகளை செய்தனர். இந்நிலையில் தொடர் மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சோமவாரத்திற்கு வருகை தந்த பெண்கள் ஐந்தருவி, புலி அருவியில் புனித நீராடினர். பாதுகாப்பு ஏற்பாடுகளை குற்றாலம் போலீசார் செய்திருந்தனர்.

The post கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு குற்றாலம் விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Kulalam Vinayagar Temple ,Karthighai ,TENKASI ,VINAYAKAR ,TEMPLE ,KALTALALA ,Karthikai ,Kulalam ,Vinayagar Temple ,
× RELATED சரணம் ஐயப்பா… சாமி சரணம் ஐயப்பா…