×

நிர்வாண வீடியோ வெளியிடுவேன் நாதக நிர்வாகி மிரட்டல் பெண் தற்கொலை முயற்சி: எஸ்.பி.யிடம் பரபரப்பு புகார்

திருச்சி: நிர்வாண புகைப்படம், வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாக 42வயது பெண்ணை மிரட்டிய நாதக நிர்வாகி மீது திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த 42வயது பெண் திருச்சி மாவட்ட சைபர் கிரைமில் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது : நான் பி.எஸ்சி பட்டதாரி. விவாகரத்துக்குபின் திருச்சி, வயலுார் பகுதியில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் வரவேற்பாளராக 2017 முதல் 2019 வரை வேலை செய்தேன்.

அப்போது மேலாளராக இருந்தவரின் உறவினரான நாதக நிர்வாகி இலங்கை தமிழர் இளங்கோ (எ) ஜானி(50) அங்கு வந்து என்னுடன் அறிமுகமானார். லண்டனில் சூப்பர் மார்க்கெட் துவங்கவுள்ளதாகவும், அதற்கு திருச்சியில் இருந்து மளிகை பொருட்களை கொள்முதல் செய்து அனுப்பி வைக்குமாறும் கூறி மாதம் ரூ.20 ஆயிரம் கொடுத்தார். பின்னர் துபாயில் என் பெயரில் ஒரு நிறுவனம் தொடங்குவதாகவும், அதற்கு உரிமம் பெற என்னை துபாய் அழைத்தார்.

அதற்காக 2 நாட்கள் நான் துபாய் சென்றபோது நான் ஆடை மாற்றுவதையும், குளிப்பதையும் எனக்கு தெரியாமல் இளங்கோ (எ) ஜானி புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். இந்நிலையில் எனக்கும் ஈரோட்டை சேர்ந்த வாலிபருக்கும் மறுமணம் நடந்தது. கணவரை விட்டு லண்டனுக்கு வந்து விடு, இல்லாவிட்டால் ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டினார்.

இதனால் நான் கடந்த 21.7.2024ல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றேன். எனது கணவர் காப்பாற்றினார். தொடர்ந்து என் அந்தரங்க புகைப்படத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டி வருகிறார்.இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார். இந்த புகாரின்பேரில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நாதக நிர்வாகி ஜானி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நிர்வாண வீடியோ வெளியிடுவேன் நாதக நிர்வாகி மிரட்டல் பெண் தற்கொலை முயற்சி: எஸ்.பி.யிடம் பரபரப்பு புகார் appeared first on Dinakaran.

Tags : Nathaka ,S.B. Trichy ,Trichy district ,Musiri ,
× RELATED எங்களை எச்சில் என்று சீமான் திட்டுவதா?...