- குட்கா
- செங்கல்பட்டு
- பாலூர் காவல் நிலையம்
- தமிழ் அரசு
- பாலூர் காவல் நிலையம்
- பாலூர் போலீஸ்
- பேளூர்
- தின மலர்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த பாலூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் அதிகளவில் விற்பனை நடைபெறுவதாக பாலூர் காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. அதனால், பாலூர் போலீசார் பாலூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குட்கா விற்பனையை தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். போலீசார் கடை கடையாக சென்று சோதனையிட்டனர்.
இந்நிலையில், பாலூர் அடுத்த ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சிலுவை அந்தோணி (38) என்பவர் அதேபகுதியில் நடத்தி வரும் பெட்டிக்கடையில் போலீசார் சோதனை நடத்தினர். போலீசார் நடத்திய சோதனையில் சிலுவை அந்தோணி விற்பனைக்காக வைத்திருந்த தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களான ஹான்ஸ், கூல்-லிப், சுவாகத்சூப்பர், சிம்லா உள்ளிட்ட பல்வேறு வகையான 12ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு சிலுவை அந்தோணி மீது வழக்கு பதிவு செய்து அவரை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post குட்கா விற்றவர் கைது appeared first on Dinakaran.