×

கோவா குலோப் ஜாமூன்

தேவையானவை:

மைதா மாவு – 1 கப்,
சுரைக்காய் துருவல் – 1 கப்,
சர்க்கரை – 2 கப்,
சர்க்கரை இல்லாத கோவா – ½ கப்,
கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை,
பைனாப்பில் எசன்ஸ் – ஒரு துளி,
வெண்ணெய் – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – தேவைக்கு.

செய்முறை:

மைதா மாவில் கோவா, வெண்ணெய், சுரைக்காய் துருவல் சேர்த்து பிசையவும். இதை சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரிக்கவும். சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கம்பிப்பாகா காய்ச்சவும். இந்த பாகில் கேசரி பவுடர், பைனாப்பிள் எசன்ஸ் சேர்த்து பொரித்து உருண்டைகளை பாகில் போடவும். இது வித்தியாசமான குலோப் ஜாமூன்.
ருசியாக இருக்கும்.

The post கோவா குலோப் ஜாமூன் appeared first on Dinakaran.

Tags :
× RELATED வாழைப்பிஞ்சு பருப்பு உப்புமா