தேவையானவை:
சந்தன தூள் – 100 கிராம்,
சர்க்கரை – 2 கிலோ,
சுத்தமான தண்ணீர் – 4 லிட்டர்,
பன்னீர் – 150 கிராம்.
செய்முறை:
சந்தனத் தூளைச் சுத்தமான தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்திருந்து, மறு நாள் காலையில் அந்தப் பாத்திரத்தை அப்படியே அடுப்பிலேற்றி சிறு தீயில் காய்ச்சவும். அறைபாகமாகச் சுண்டியப்பின் அடுப்பிலிருந்து இறக்கி வடிக்கட்டவும். பின் வடிகட்டி எடுத்தச் சந்தன நீரோடு சர்க்கரையைச் சேர்த்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். பாகானது நார் போல் நீண்டு வரும் தருணத்தில் அதில் பன்னீரைக் கலந்து நன்றாகக் கலக்கி, தேன் பதத்தில் கீழிறக்கி ஆறவைக்கவும். முழுவதும் ஆறவிடாமல் லேசான சூடு இருக்கும் போதே பாட்டில்களில் ஊற்றி அடைத்து கார்க்கிட்டு லேபிள் ஒட்டி விற்பனைக்கு அனுப்பலாம்.
The post சந்தன சர்பத் appeared first on Dinakaran.