×
Saravana Stores

ரூ.12.60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் போரூர் ஈரநிலை பசுமை பூங்கா விரைவில் முதலமைச்சரால் திறக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 16.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள போரூர் ஈரநிலை பசுமை பூங்கா, சென்னை, அம்பத்தூர், பானு நகரில் 1.80 ஏக்கர் பரப்பளவில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படவுள்ள விளையாட்டு மைதானம், ரூ.12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அம்பத்தூர் எஸ்டேட் புதிய பேருந்து நிலையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்:
தமிழ்நாடு முதலமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி இன்று சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 16.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள போரூர் ஈரநிலை பசுமை பூங்கா, அதேபோல் அம்பத்தூர் பகுதியில் உள்ள பானு நகரில் ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் கால்பந்தாட்ட மைதானம், இதே போன்று அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 12 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. போரூர் ஈரநிலை பசுமை பூங்கா ரூ.12.60 கோடி மதிப்பீட்டில் 16.60 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. இப் பூங்காவில் 103 இருக்கைகள், 560 மீட்டர் நீளம் WPC நடைபாதை, 282 மீட்டர் நீளம் செங்கல் நடைபாதை, 126 மீட்டர் நீளம் கொண்ட கருங்கல் நடைபாதை, கூடைபந்து விளையாட்டு மைதானம், அனைத்து வகையான விளையாட்டு மைதானம், 6.85 ஏக்கர் அளவில் ஏரி, திறந்தவெளி உடற்பயிற்சி மைதானம் மற்றும் பார்க்கிங் வசதி மற்றும் கழிப்பிட வசதி மற்றும் 2 கடைகள் அமையவுள்ளது.

2024-25 சட்டமன்ற அறிவிப்பில் அறிவித்த சென்னை, அம்பத்தூர் பானு நகரில் விளையாட்டு மைதானம் ரூ.6 கோடி மதிப்பீட்டில் 1.80 ஏக்கர் பரப்பளவில் கால்பந்து மைதானம், சிறவர் விளையாட்டு திடல், பார்வையாளர் மாடம் (கேளரி), திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் அமையவுள்ளது. சென்னை, அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம் ரூ.12 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 70,000 சதுர அடி கொண்ட இப்பேருந்து நிலையத்தில் 23,000 சதர அடியில் G + 2 மாடி (floors) கட்டப்பட்டுள்ளது. மேலும் இப்போருந்தில் 10 கடைகள், 1 No. சூப்பர் மார்க்கெட் / 2 ATM மையம், முதியோர்களுக்கான தனி இருக்கைகள் / பொதுமக்கள் இருக்கைகள், அலுவலகங்கள் / டிக்கட் கவுண்டர், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் / கழிப்பட வசதிகள் (200 Nos.) கட்டப்பட்டுவருகிறது.

அதிமுக ஆட்சியில் திட்டமிடாமல் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், திமுக ஆட்சியில் உலகத்தரத்தில் முடிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 18 பேருந்து நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றது. குத்தாம்பாக்கம் பேருந்து நிலையம் பிப்ரவரி மாதம் 2025 இல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் முடிக்கப்பட்டு இந்த மாத இறுதியில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் திறந்து வைக்க உள்ளார். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 7 பேருந்து நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ரூ.12 கோடி மதிப்பீட்டில் பயணிகள் பொழுது போக்க தொலைகாட்சி வசதியுடன் கட்டப்பட்டு வரும் அம்பத்தூர், தொழிற்பேட்டை பேருந்து நிலையம் வரும் பிப்ரவரி மாதம் 2025 இல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். மேலும் சி.எம்.டி.ஏ சார்பில் கட்டப்பட்டு வரும் அனைத்து பேருந்து நிலையங்களும் 2025 டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடைந்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வுகளின் போது மதுரவாயில் சட்டமன்ற உறுப்பினர் க.கணபதி, அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., மண்டலக் குழுத்தலைவர்கள் நொளம்பூர் வே.ராஜன், பி.கே.மூர்த்தி, சி.எம்.டி.ஏ தலைமைத் திட்ட அமைப்பாளர்கள் எஸ்‌.ருத்ரமூர்த்தி, ந.ரவிக்குமார், கண்காணிப்புப் பொறியாளர்கள் ராஜமகேஷ்குமார், பாலமுருகன், செயற்பொறியாளர் ராஜன்பாபு, மாமன்ற உறுப்பினர்கள் ஹேமலதா, டிஎஸ்பி. ராஜகோபால், உள்ளாட்சி பிரதிநிதிகள் எம்டிஆர்.நாகராஜன், ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post ரூ.12.60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் போரூர் ஈரநிலை பசுமை பூங்கா விரைவில் முதலமைச்சரால் திறக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Borur Wetland Green Park ,Chief Minister ,Minister ,Shekharbabu ,Chennai ,Chennai Metropolitan Development Corporation ,Banu Nagar, Ambattur, Chennai ,Green Park ,Dinakaran ,
× RELATED உள்துறையையும் நானே ஏற்பேன்: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்