×
Saravana Stores

குரங்குக் குட்டியை பார்வையிட மருத்துவருக்கு அனுமதி: ஐகோர்ட்

சென்னை: தெரு நாய்களால் கடிபட்ட குரங்குக் குட்டியை பார்வையிட கால்நடை மருத்துவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சிகிச்சை முடியாததால் குரங்குக் குட்டியை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி மருத்துவர் வல்லப்பன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், நவம்பர். 9 காலை 11 மணிக்கு குரங்குக் குட்டியை பார்வையிட்டு சிகிச்சையளிக்கலாம். குரங்குக் குட்டி மருத்துவரால் அடையாளம் காணப்பட்டதா என அறிக்கை அளிக்க வனத் துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நவம்பர். 14ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

The post குரங்குக் குட்டியை பார்வையிட மருத்துவருக்கு அனுமதி: ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Madras High Court ,Doctor ,Vallappan ,
× RELATED விஐபிக்கள் நீதிமன்றத்தில்...