சென்னை: அரசின் திட்டங்களை கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்க்கும் அதிகாரிகளால் தான் கனவுகள் மெய்ப்படுகிறது என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முதல்வரின் எக்ஸ் வலைதள பதிவில்:
ஒரு திட்டத்தின் வெற்றி என்பது அதன் நோக்கத்தைவிடவும் அதனை நடைமுறைப்படுத்தும் முறையில்தான் அடங்கியிருக்கிறது. அந்த வகையில், கோவை மாவட்டத்தில் நேற்று நான் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில், பில்லூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் 3-ஆம் கட்டப் பணிகளை, குறித்த காலத்தில் நிறைவேற்றிக் காட்டிய அதிகாரிகளையும்; தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் மாநிலத்திலேயே அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்திக் காட்டி வரும் அதிகாரிகளையும்; மாற்றுத்திறனாளித் தோழர்களுக்காக நமது நமது திராவிடமாடல் அரசு கொண்டு வந்த திட்டங்களை அதிக அளவிலான பயனாளிகளுக்குக் கொண்டு சேர்த்த அதிகாரிகளையும் பாராட்டி ஊக்கமளித்தேன்.
ஒரு திட்டத்தின் வெற்றி என்பது அதன் நோக்கத்தைவிடவும் அதனை நடைமுறைப்படுத்தும் முறையில்தான் அடங்கியிருக்கிறது!
அந்த வகையில், கோவை மாவட்டத்தில் நேற்று நான் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில்,
பில்லூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் 3-ஆம் கட்டப் பணிகளை, குறித்த காலத்தில் நிறைவேற்றிக்… pic.twitter.com/xpvZkiT566
— M.K.Stalin (@mkstalin) November 6, 2024
நமது திராவிட_மாடல் அரசின் திட்டங்களைக் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்க்கும் இத்தகைய அதிகாரிகளால்தான், நமது கனவுகள் மெய்ப்படுகிறது என கூறியுள்ளார்.
The post அரசின் திட்டங்களைக் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்க்கும் அதிகாரிகளால்தான், நமது கனவுகள் மெய்ப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.