- யூனியன்
- அமைச்சர்
- குமாரசாமி
- ATGP
- பெங்களூரு
- எச்.டி.குமாரசாமி
- முதல் அமைச்சர்
- கர்நாடக
- சாய் வெங்கடேஸ்வரா மினரல்ஸ்
- பல்லாரி மாவட்டம்
- லோக்ஆயுக்தா
- ADGP
- தின மலர்
பெங்களூரு: கர்நாடக முதல்வராக எச்.டி.குமாரசாமி இருந்தபோது, பல்லாரி மாவட்டத்தில் சாய் வெங்கடேஷ்வர மினரல்ஸ் நிறுவனத்திற்கு 557 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், முதல்வராக இருந்த குமாரசாமிக்கு அதில் தொடர்பு இருப்பதாகவும் லோக்ஆயுக்தாவில் புகார் கொடுக்கப்பட்டது. அதையேற்று வழக்கு பதிவு செய்த லோக்ஆயுக்தா, இப்புகாரை விசாரணை நடத்த கூடுதல் டிஜிபி சந்திரசேகர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைத்தது. குமாரசாமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி வழங்ககோரி கடந்த சில மாதங்களுக்கு முன் மாநில ஆளுநருக்கு 2வது நினைவூட்டல் கடிதத்தை கூடுதல் டிஜிபி சந்திரசேகர் எழுதினார்.
இதையடுத்து டிஜிபி சந்திரசேகரை தற்போது ஒன்றிய அமைச்சராக உள்ள குமாரசாமி பல இடங்களில் விமர்சித்து வந்தார். இந்நிலையில் லோக்ஆயுக்தா கூடுதல் டிஜிபி சந்திரசேகர், பெங்களூரு சஞ்சய்நகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில், ஒன்றிய அமைச்சர் குமாரசாமி,அவரது மகன் நிகில்கவுடா மற்றும் ஆதரவாளர்கள் எனக்கு எதிராக மாநில தலைமை செயலாளரிடம் பொய் புகார் கொடுத்துள்ளதுடன் மிரட்டி வருகிறார்கள் என்று கூறியுள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் எச்.டி.குமாரசாமி, அவரது மகன் நிகில்கவுடா உள்பட 3 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இதை மாநகர போலீஸ் கமிஷனர் பி.தயானந்தாவும் உறுதி செய்தார்.
The post ஏடிஜிபி புகாரை ஏற்று ஒன்றிய அமைச்சர் குமாரசாமி மீது வழக்கு appeared first on Dinakaran.