×
Saravana Stores

சாலை விரிவாக்க பணிகளுக்காக வீடு இடிப்பு; பாதிக்கப்பட்டவருக்கு ரூ25 லட்சம் இழப்பீடு: உபி அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு


புதுடெல்லி: உபி மாநிலம்,மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு சாலை விரிவாக்க பணிகளுக்காக பல வீடுகள் இடிக்கப்பட்டது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட நபர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பர்திவாலா,மனோஜ் மிஸ்ரா அடங்கிய பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.பாதிக்கப்பட்ட நபர் சார்பில் சித்தார்த் பட்நாகர்,சுபம் குல்ஷ்ரெஸ்தா ஆஜராகினர். இதை விசாரித்த நீதிபதிகள், பொது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. அவர் 3.7 சதுர மீட்டர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவதை நாங்கள் ஏற்கிறோம்.ஆனால் எந்தவித முன்னறிவிப்பு இன்றி எப்படி வீடுகளை இடிக்கலாம்.

எந்த வித நோட்டீஸ் எதுவும் கொடுக்காமல் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து கட்டுமானங்கள் இடிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதோடு,அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். மேலும், இதன் நீதிமன்ற தீர்ப்பு நகலை அனைத்து மாநில அரசுகள்,யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு வழங்கும்படி பதிவாளருக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், சாலை விரிவாக்க பணிகளுக்காக வீடுகள் இடிப்பது தொடர்பாக உரிய நடைமுறைகள் பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளது.

The post சாலை விரிவாக்க பணிகளுக்காக வீடு இடிப்பு; பாதிக்கப்பட்டவருக்கு ரூ25 லட்சம் இழப்பீடு: உபி அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Ubi ,New Delhi ,Ubi state ,Maharajganj district ,Chief Justice ,Chandrasuet ,Justices Parthiwala ,Manoj Misra ,Dinakaran ,
× RELATED கிழக்கிந்திய கம்பெனி இடத்தில் ஏகபோக முதலாளிகள்: ராகுல்காந்தி விமர்சனம்