×
Saravana Stores

உத்தரப்பிரதேச அரசு 2004-ல் கொண்டு வந்த மதரஸா கல்வி வாரிய சட்டம் செல்லும் : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி : உத்தரப்பிரதேச அரசு 2004-ல் கொண்டு வந்த மதரஸா கல்வி வாரிய சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. உத்தர பிரதேசத்தில் மதரஸா கல்வி வாரிய சட்டம் கடந்த 2004-ம் ஆண்டு சமாஜ்வாதி ஆட்சியின் போது கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் அங்குள்ள 16,000 மதரஸாக்களில் 17 லட்சம் மாணவர்கள் படித்து வந்தனர்.இந்நிலையில் உ.பி மதரஸா கல்வி வாரிய சட்டம், மதசார்பின்மை விதிமுறைகளை மீறுவதால் அது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கூறி அதை அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் மதரஸா மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மதரஸா பள்ளிகள், மதரஸா ஆசிரியர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், “உத்தரப்பிரதேச அரசு 2004-ல் கொண்டு வந்த மதரஸா கல்வி வாரிய சட்டம் செல்லும். மதரஸா சட்டத்தை ரத்து செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. சிறுபான்மையினர் கல்வி நிலையங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுகரு உண்டு. சிறுபான்மையினர் கல்வி நிலையங்களை மாநில அரசுகள் ஒழுங்குப்படுத்த இயலும்,” இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் மாநில பாஜக அரசுக்கும். ஒன்றிய பாஜக அரசுக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

The post உத்தரப்பிரதேச அரசு 2004-ல் கொண்டு வந்த மதரஸா கல்வி வாரிய சட்டம் செல்லும் : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh government ,Supreme Court ,Delhi ,Uttar Pradesh ,Samajwadi ,Government of Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED டெல்லி காற்று மாசு: உச்சநீதிமன்றம் அதிருப்தி