- பிலிப்பைன்ஸ் ஆ
- தென்சீன கடல்
- மணிலா
- சீனா
- பிலிப்பைன்ஸ்
- வியட்நாம்
- மலேஷியா
- இந்தோனேஷியா
- புரூணை
- தைவான்
- தின மலர்
மணிலா: சீனா தென் சீன கடல் பகுதி முழுவதும் தனக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடுகிறது. இது தொடர்பாக பிலிப்பைன்ஸ்,வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா,புருனே மற்றும் தைவான் ஆகிய நாடுகளுக்கும் சீனாவுக்கும் பிரச்னை இருந்து வருகிறது. கடந்த மாதம் தென் சீன கடலில், ஆய்வு பணியில் ஈடுபட்ட இந்தோனேசிய கப்பலுக்கு சீன கடலோர காவல் படையினர் இடையூறு ஏற்படுத்தினர். இதையடுத்து இந்தோனேசிய ரோந்து கப்பல்கள் சீன கடலோர காவல் படையினரை விரட்டி அடித்தனர். இந்த நிலையில்,தென் சீன கடலில் பிலிப்பைன்ஸ் ராணுவம் நேற்று 2 வார போர் பயிற்சியை தொடங்கியது.
இதில் ராணுவம்,கடற்படை மற்றும் விமான படையை சேர்ந்த 3,000 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ராணுவ பயிற்சி என்பது எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என்று பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். பிலிப்பைன்ஸ் படையினர் ஒரு தீவை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள் என்று பிலிப்பைன்ஸ் ராணுவ அதிகாரி மைக்கேல் லாஜிக்கோ தெரிவித்தார்.
The post தென் சீன கடலில் பிலிப்பைன்ஸ் ராணுவம் 2 வார போர் பயிற்சி appeared first on Dinakaran.