×
Saravana Stores

கல்லறை திருநாளையொட்டி முன்னோர்களின் கல்லறைக்கு கிறிஸ்தவர்கள் சென்று பிரார்த்தனை

சென்னை: கல்லறை திருநாளையொட்டி நேற்று கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களின் கல்லறைக்கு சென்று பிரார்த்தனை மற்றும் வழிபாடு செய்தனர். சென்னை கல்லறை வாரியத்துக்கு உட்பட்ட கீழ்ப்பாக்கம், காசிமேடு, மந்தைவெளி, பட்டினப்பாக்கம், தாம்பரம் மற்றும் ஒவ்வொரு ஊர்களிலும் கிறிஸ்தவர்கள் மரணம் அடைந்தால் அடக்கம் செய்யும் இடங்களில் உள்ள கல்லறை தோட்டங்களில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்களின் கல்லறைக்கு வந்து, அதை கழுவி சுத்தம் செய்து, மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி போன்றவற்றை ஏற்றி, ஜெபப் புத்தகத்தை படித்து, பாடல்களை பாடி பிரார்த்தனை செய்தனர். கத்தோலிக்க திருச்சபை கல்லறைத தோட்டத்தில் பங்குத்தந்தை தலைமையில் சிறப்பு கூட்டு பிராத்தனை நடைபெற்றது. கல்லறை திருநாள் நிகழ்ச்சிக்கு தேவையான பூ, மாலை, ஊதுபத்தி போன்ற பொருட்கள் பெருமளவில் கல்லறை தோட்டத்துக்கு வெளியே விற்பனை செய்யப்பட்டது.

முன்னோர்களின் கல்லறைக்கு சென்று வழிபடுவதன் மூலம் அவர்களின் ஆசீர்வாதம் எப்போது தங்களின் குடும்பத்திற்கு கிடைக்கும் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை ஆகும். இதனால் கல்லறை திருநாளையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் கல்லறைக்கு சென்று தங்களின் முன்னோர்களை வழிபட்டனர். வேளாங்கண்ணியில் கடந்த 2004ம் ஆண்டு சுனாமியால் இறந்த ஆயிரம் பேர் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டனர். அங்கு அமைந்துள்ள சுனாமி ஸ்தூபியில் வேளாங்கண்ணி பேராலயத்தின் சார்பில் கல்லறை திருநாள் வழிபாடு நடைபெற்றது.

The post கல்லறை திருநாளையொட்டி முன்னோர்களின் கல்லறைக்கு கிறிஸ்தவர்கள் சென்று பிரார்த்தனை appeared first on Dinakaran.

Tags : Christians ,CHENNAI ,Kilpakkam ,Kasimedu ,Mantaivela ,Pattinappakkam ,Tambaram ,Chennai Cemetery Board ,
× RELATED வழிப்பாதையை மீட்டு தரக்கோரி கலெக்டரிடம் மனு