திருவாரூர்: திருவாரூரில் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 500 ஏக்கர் குறுவை நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியுள்ளது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. மாங்குடி, நுணாக்காடு, கடுவெளி உள்ளிட்ட கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் நீரில் மூழ்கியது.
The post 500 ஏக்கர் குறுவை நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது..!! appeared first on Dinakaran.