×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்தது

மேட்டூர்: கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக மழை தணிந்துள்ளதால், ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில், நேற்று முன்தினம் நீர்வரத்து 7,500 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 6,500 கனஅடியாக சரிந்துள்ளது.

தீபாவளி பண்டிகைக்காக 4 நாள் தொடர் விடுமுறையால் ஒகேனக்கல்லில் நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவிகளில் குளித்தும், ஆற்றில் பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 8,099 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 7,325 கனஅடியாக சரிந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12,000 கனஅடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 600 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. வரத்தை விட நீர்திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 108.22 அடியாக இருந்த நீர்மட்ம் நேற்று காலை 107.88 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 73.25 டிஎம்சியாக உள்ளது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்தது appeared first on Dinakaran.

Tags : Mettur Dam ,Mettur ,Cauvery ,Karnataka ,Tamil Nadu ,Okenakal Cauvery ,Okanagan Kaveri ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு: 10,000 கனஅடியாக உயர்வு