×

கோதுமை ரோல் சிப்ஸ்

தேவையானவை:

கோதுமை மாவு – 2 கப்,
ஓமம், மஞ்சள்த் தூள் – தலா ½ டீஸ்பூன்,
நீர், ஆம்சூர் பொடி, கரம் மசாலா பொடி, மிளகாய்த் தூள் – தலா 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை:

கோதுமை மாவுடன் உப்பு, ஓமம், மஞ்சள் தூள், நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். சிறிது நேரம் ஊறியப் பிறகு சப்பாத்திப் போல் செய்து சதுரங்களாக வெட்டி ரோல் போல் சுற்றிக் கொள்ளவும். சதுரங்களின் எதிர் இரு முனைகளை மட்டும் அழுத்தி ரோல் மாதிரி சுற்றவும். இது போல் அனைத்தும் செய்த பிறகு எண்ணெயில் பொரிக்கவும். பொரித்து எடுத்தப் பிறகு பொரித்த சூடான கறிவேப்பிலையை தூவி, ஆம்சூர்ப் பொடி, கரம்மசாலா தூள்,
மிளகாய்த் தூள் தூவவும்.

The post கோதுமை ரோல் சிப்ஸ் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED ?ஒருவருக்குச் செல்வம் சேரச்சேர...