×
Saravana Stores

உளவுத்துறையின் மூலம் தகவல்கள் சேகரிப்பு; சீக்கிய பிரிவினைவாத அமைப்பினரை குறிவைக்கும் சதித்திட்டம்.! அமித் ஷா மீது கனடா அமைச்சர் பகீர்

நியூயார்க்: கனடாவில் இருந்து செயல்படும் சீக்கிய பிரிவினைவாத அமைப்பினரைக் குறிவைக்கும் சதித்திட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பங்கு இருந்ததாக கனடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம், பிரிட்டிஷ் கொலம்பியாவில் கனடாவைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாதி என்று இந்தியாவால் அடையாளம் கூறப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசின் பங்கு இருப்பதற்கான நம்பகமான ஆதாரங்கள் கனடாவிடம் இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஆண்டு முதலே கூறி வந்தார்.

ஆனால், கனடா அளித்த அதாரங்களில் உண்மையில்லை என்று மத்திய அரசு அதிகாரிகள் பலமுறை குற்றச்சாட்டுகளை மறுத்துவிட்டதுடன், கனடாவின் குற்றச்சாட்டுகளை அபத்தமானது என்றும் கூறியிருந்தனர். இந்நிலையில் கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாத குழுக்களுக்கு எதிரான வன்முறை, மிரட்டல் மற்றும் உளவுத்துறை மூலம் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கைக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டிருந்ததாகக் கிடைத்த தகவலை, அமெரிக்க ஊடகத்திடம் கனடா நாட்டு மூத்த அதிகாரி பகிர்ந்துள்ளார்.

ஏற்கனவே, இந்தியா – கனடா நாடுகளுக்கு இடையே இருக்கும் மோதல் போக்கு, இந்த செய்திகள் மூலமாக மேலும் பிளவை அதிகரித்துள்ளது. ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் தொடர்பு பற்றி, தேசிய பாதுகாப்புக் குழுவின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கனடா நாட்டின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் டேவிட் மோரிசன் கூறியுள்ளார். ஆனால், அமித் ஷாவின் தொடர்பு பற்றி கனடா நாட்டுக்கு எப்படி தெரிய வந்தது என்னபதை மோரிசன் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post உளவுத்துறையின் மூலம் தகவல்கள் சேகரிப்பு; சீக்கிய பிரிவினைவாத அமைப்பினரை குறிவைக்கும் சதித்திட்டம்.! அமித் ஷா மீது கனடா அமைச்சர் பகீர் appeared first on Dinakaran.

Tags : Canada Minister ,Bakeer ,Amit Shah ,New York ,Union Interior Minister ,Canada ,British Columbia ,Sikh ,Minister ,Bakir ,
× RELATED அமித்ஷாவின் வெளிநாட்டு பயணம் குறித்த...