×
Saravana Stores

படைகளை அனுப்பிய நிலையில் வடகொரியா வெளியுறவு அமைச்சர் ரஷ்யா பயணம்

சியோல்: உக்ரைன் போரால் உலகமே அமெரிக்கா மற்றும் ரஷ்யா தலைமையின் கீழ் என 2 அணியாக பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் முதல் படியாக, உக்ரைன் போரில் உதவ வடகொரியா தனது படைகளை ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில், வடகொரியா வெளியுறவு அமைச்சர் சோ சோன் ஹுய் தலைமையில் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு ரஷ்யாவுக்கு நேற்று முன்தினம் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பயணத்தின் நோக்கம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால், உக்ரைன் போரில் உதவுவதற்கு ஈடாக தேவையானதை ரஷ்யாவிடம் கேட்டுப் பெற வடகொரியா தனது வெளியுறவு அமைச்சரை அனுப்பியிருப்பதாக தென் கொரிய உளவுத்துறை கூறி உள்ளது. குறிப்பாக, உளவு செயற்கைகோள் அனுப்பும் திட்டத்தில் வடகொரியா சமீபத்தில் தோல்வி அடைந்தது. இதற்கான உதவியை ரஷ்யாவிடம் கேட்டுப் பெறும் என்று கூறப்படுகிறது.

The post படைகளை அனுப்பிய நிலையில் வடகொரியா வெளியுறவு அமைச்சர் ரஷ்யா பயணம் appeared first on Dinakaran.

Tags : North Korea ,Russia ,Seoul ,Ukraine ,United States ,Foreign Minister ,Dinakaran ,
× RELATED உக்ரைன் போரில் ஈடுபட ரஷ்யாவில் 3,000...