×

விஜய் ரசிகர்கள் ஓட்டு எங்க கட்சிக்குதான்…சீமான் நம்பிக்கை

தேனி: வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கே விஜய் ரசிகர்கள் வாக்களிப்பார்கள் என தேனியில் சீமான் தெரிவித்தார்.தேனி அருகே மதுராபுரியில், நாம் தமிழர் கட்சியின் தேனி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் கடந்த 4 முக்கிய தேர்தல்களை நாம் தமிழர் கட்சி தனித்தே சந்தித்துள்ளது. இத்தேர்தல்களில் தோல்வியடைந்தாலும், வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் எவ்வித சமரசமுமின்றி தனித்தே போட்டியிடும்.

அடுத்தடுத்து வரும் தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும். நடிகர் விஜய்க்கு எத்தனை சதவீத ஓட்டு இருக்கிறது என தெரியாத நிலையில், யாரெல்லாம் இவருடன் கூட்டணி அமைக்க உள்ளார்கள் என்பது பின்னால் தெரியும். விஜய் கட்சியில் இருப்பவர்கள் அவரது ரசிர்கள். என்னை சினிமா ரசிகராக பார்த்து யாரும் நாம் தமிழர் இயக்கத்தில் சேரவில்லை. விஜய் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்ட விஜய் ரசிகர்கள் விஜயை ரசிப்பார்கள். தேர்தல் என வந்தால் விஜய் ரசிகர்களும், நாம் தமிழர் கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post விஜய் ரசிகர்கள் ஓட்டு எங்க கட்சிக்குதான்…சீமான் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Vijay ,Seaman ,Theni ,Teniil Seaman ,MADURAPURI, ,TAMIL PARTY ,Akkatsi ,Seiman Hopi ,
× RELATED கல்லூரியில் வகுப்பு முடிந்து வந்த...