×

பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் கையடக்கக் கணினிகளை வழங்கினார் மேயர் பிரியா

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும், மேயர் ஆர்.பிரியா கையடக்கக் கணினிகளை (TAB) இன்று வழங்கினார். மேயர் அவர்களின் 2024-25ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளில் உள்ள பணிகளை மேம்படுத்துதல் தொடர்பான நடவடிக்கைகளுக்காகவும், காகிதமில்லா நடைமுறையினை செயல்படுத்துவதற்காகவும் அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும், மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் கையடக்கக் கணினிகளை (TAB) ரிப்பன் கட்டட அலுவலகத்தில் இன்று (29.10.2024) வழங்கினார்.

மேயர் அவர்களின் 2024-25ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிவிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 1 முதல் 15 வரையிலான மண்டலங்களின் 200 வார்டுகளிலும் உள்ள பல்வேறு பணிகளை மேம்படுத்துதல் தொடர்பான நடவடிக்கைகளுக்காகவும், காகிதமில்லா நடைமுறையினை செயல்படுத்துவதற்காகவும், 200 எண்ணிக்கையிலான கையடக்கக் கணினிகள் (TAB) கொள்முதல் செய்து மாமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள், கோரிக்கைகள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து மாமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் வாயிலாகவும், நேரடியாகவும் மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தகவல்நுட்ப செயல்பாட்டின் ஒரு பகுதியாகவும், சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும், பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் காகிதமில்லா நடைமுறையினை (Paperless Transaction) கொண்டு வருவதற்காகவும், அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் 200 எண்ணிக்கையில் Samsung S9 fE கையடக்கக் கணினிகள் மற்றும் 4G Wi-Fi Hotspot (2 Years Subscription cost) இணைப்புடன் தலா ரூ.47,646/- மதிப்பில் என மொத்தம் ரூ.95.29 இலட்சம் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டு, இன்று மேயர் அவர்களால் 196 மாமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.

The post பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் கையடக்கக் கணினிகளை வழங்கினார் மேயர் பிரியா appeared first on Dinakaran.

Tags : MAYOR ,PRIYA ,METROPOLITAN ,CHENNAI MUNICIPALITY ,Chennai ,R. Priya ,Metropolitan Chennai Municipal Corporation ,Greater Chennai Municipality ,
× RELATED மாநகராட்சி பகுதிகளில் உள்ள மயான...