×

ஜெயங்கொண்டத்தில் தீபாவளி தொகுப்பு இலவச வேட்டி சேலை

 

ஜெயங்கொண்டம், அக்.29: ஜெயங்கொண்டத்தில் முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலைகளை எம்எல்ஏ கண்ணன் வழங்கினார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் நகரில், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி, கூட்டுறவுத்துறை அரியலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், கூட்டுறவு கொண்டாட்டம் தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை மற்றும் முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலை வழங்கும் விழாவில்,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் சிறப்பு தொகுப்பினை வழங்கி,வேட்டி,சேலை வழங்கினார்.

இந்நிகழ்வில் கூட்டுறவு துணைப் பதிவாளர் இளஞ்செல்வி (பொ),மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம்,ஜெயங்கொண்டம் நகர் மன்ற தலைவர் சுமதி சிவகுமார், சார்பதிவாளர் சசிகுமார், வட்ட வழங்கல் அலுவலர் ஜானகிராமன்,கூட்டுறவு சங்க செயலாளர் கண்ணன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

The post ஜெயங்கொண்டத்தில் தீபாவளி தொகுப்பு இலவச வேட்டி சேலை appeared first on Dinakaran.

Tags : Jayangkont ,Jayangondam ,MLA ,Kannan ,Jayangkondam Assembly Constituency ,Jayangkondam Nagar ,Chief Minister of ,Tamil ,Nadu ,Cooperative Ariyalur District Administration ,
× RELATED அரியலூர் – ஜெயங்கொண்டம் நான்கு...