×

கூட்டுறவு சங்க பணியாளர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம்: பணிகள் பாதிப்பு

 

தேனி, அக். 23: தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து கூட்டுறவு நியாய விலைக் கடை ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் துவங்கி உள்ளது. தேனி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 79 கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்டவைகளில் 54 கூட்டுறவு சங்கங்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன .

இதே போல மொத்தம் உள்ள 43 நியாயவளை கடைகளில் 252 நியாய விலை கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் என மொத்தம் சுமார் 300 பேர் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இப்போராட்டத்தின் காரணமாக தீபாவளி பண்டிகையொட்டி நியாய விலை கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசி, பருப்பு, சீனி உள்ளிட்ட பொருள்களின் விற்பனையும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர் கடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் நகை கடன், மகளிர் சுய உதவி குழு கடன் உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்டுள்ளன.

 

The post கூட்டுறவு சங்க பணியாளர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம்: பணிகள் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Theni ,Tamilnadu Primary Cooperative Bank ,All Employees Union ,All Cooperative Fair Price Shop Employees Union ,Dinakaran ,
× RELATED அரையாண்டு தேர்வு விடுமுறையை...