×

கோயில் உண்டியலை உடைத்து திருட முயற்சி

சங்கராபுரம், அக். 23: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே தியாகராஜபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யனார் கோயில் உள்ளது. கோயில் முன்பு சிமெண்டால் ஆன உண்டியல் உள்ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல் தர்மகர்த்தா அண்ணாமலை பூஜைகளை முடித்துவிட்டு, கோயிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

நேற்று காலை மீண்டும் கோயிலுக்கு வந்து பார்த்தபோது, கோயில் முன்பு உள்ள உண்டியல் அமைந்துள்ள சிமெண்ட் தளம் உடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இரவு நேரத்தில் கோயிலுக்கு வந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து திருட முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து ேகாயில் தர்மகர்த்தா அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் திருட்டு முயற்சியில் ஈடுபட முயன்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post கோயில் உண்டியலை உடைத்து திருட முயற்சி appeared first on Dinakaran.

Tags : Shankarapuram ,Ayyanar temple ,Thiagarajapuram ,Shankarapuram, Kallakurichi district ,Dharmakarta Annamalai ,
× RELATED கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 30...