×

தகட்டூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் படுத்து உறங்கும் நாய்கள் பொதுமக்கள் அச்சம்

வேதாரண்யம், அக். 23:வேதாரண்யம் தாலுக்கா தகட்டூரில் பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் சார்பதிவாளர் மல்லிகேஸ்வரி மற்றும் உதவியாளர் பலர் வேலை பார்த்து வருகின்றனர். ரூ.90 லட்சத்தில் கட்டிடம் கட்டப்பட்டு கணினி வசதி உட்பட அனைத்து வசதிகளும் பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கி வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து தங்கள் நிலங்களை விற்று வாங்கி பத்திரப்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் அலுவலகத்தின் வாயிலில் மற்றும்உள்பகுதியில் 10 க்கும் மேற்பட்ட நாய்கள் எப்பொழுதும் சுற்றி திரிவதுடன் உள்பகுதியில் இரண்டு நாய்கள் படுத்து உறங்குகிறது. பத்திர பதிவுக்காக வரும் பொது மக்களை அச்சுறுத்துவதுடன் பல நபர்களை கடித்துள்ளது. பத்திரப்பதிவு அலுவலகம் தற்போது நாய்கள் உறங்கும் கூடமாக மாறி இருப்பது இப்போது மக்களிடையே மிகுந்த அச்சத்தையும் மனவேதனையும் ஏற்படுத்தி உள்ளது.

The post தகட்டூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் படுத்து உறங்கும் நாய்கள் பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Taktur Registrar ,Vedaranyam ,Vedaranyam Taluk ,Taktoor ,Mallikeswari ,
× RELATED வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலத்தில்...