×

அரசு சார்பில் திருமண விழா ₹60ஆயிரத்தில் இலவச சீர்வரிசை படவேடு ரேணுகாம்பாள் கோயிலில்

கண்ணமங்கலம், அக்.22: படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் அரசு சார்பில் நேற்று நடந்த திருமண விழாவில் ₹60 ஆயிரத்தில் இலவச சீர்வரிசை வழங்கப்பட்டது. கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் நேற்று அரசு சார்பில் திருமண விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவிற்கு அறங்காவலர் குழு தலைவர் விஜயா சேகர் தலைமை தாங்கினார். செயல் அலுவலர்கள் சங்கர், சிலம்பரசன் முன்னிலை வகித்தனர். மேலாளர் சீனிவாசன் வரவேற்றார். சேர்மன் சாந்தி பெருமாள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இரண்டு ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி வழிகாட்டுதல்படி நடைபெற்ற இத்திருமணத்தில் மணமக்களுக்கு தலா 4 கிராம் தங்க தாலி, மணமக்களுக்கு புத்தாடை, கட்டில், பீரோ, மெத்தை, மிக்சி உள்ளிட்ட ₹60 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் தமிழக அரசு சார்பில் இலவசமாக வழங்கப்பட்டது. அப்போது, திருமணமான தம்பதிகள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். பின்னர் அனைவருக்கும் திருமண அறுசுவை விருந்து பறிமாறப்பட்டது.
விழாவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ஆர்.வி.சேகர் கோயில் ஆய்வாளர்கள் நடராஜன், ராகவேந்தர், கண்காணிப்பாளர் ஆறுமுகம் எழுத்தர்கள் மோகன், சிவகுமார், ரவி, ஒருங்கிணப்பாளர் ராஜசேகர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post அரசு சார்பில் திருமண விழா ₹60ஆயிரத்தில் இலவச சீர்வரிசை படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் appeared first on Dinakaran.

Tags : Patavedu Renukampal temple ,Kannamangalam ,Dinakaran ,
× RELATED கண்ணமங்கலத்தில் ஏரிக்கால்வாய் அடைப்புகள் ஜேசிபி மூலம் சீரமைப்பு