×

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி., குரூப் 2, குரூப் 4 மாதிரி தேர்வு

 

திருச்சி, அக்.19: திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான மாதிரி தேர்வு நடைபெறுகிறது. திருச்சி மாவட்ட மைய நுாலகம், என்ஆர்ஐஏஎஸ் அகாடமி மற்றும் ரேட்டரி பீனிக்ஸ் சங்கம் சார்பாக டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்விற்கும், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஆகிய போட்டித் தேர்விற்கு மாணவர்கள் தயாராக மாதிரி தேர்வு நடைபெறுகிறது. இந்த மாதிரி தேர்வு வரும் 21ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மாவட்ட மைய நுாலகத்தில் நடைபெறுகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மாதிரி தேர்வில் 6ம் வகுப்பு தமிழ் ( பழைய மற்றும் புதிய பாடபுத்தகம்) வினாக்கள் இடம் பெறும்.

இந்த மாதிரி தேர்வில் கலந்துகொள்ள கட்டணம் இல்லை. இதில், கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு வினாத்தொகுப்பு வழங்கப்பட்டு நிஜ தேர்வின் படியே ஓஎம்ஆர் விடைத்தாளில் பதிலளிக்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாதிரி தேர்வு முடிந்தவுடனே மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் குறித்து தெரிவிக்கப்படும். குறைவான மதிப்பெண்பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் அதிகம் பெற தேவையான அறிவுரைகள் வழங்கப்படும். டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் இந்த மாதிரி தேர்வில் கலந்துகொண்டு பயனபெறலாம். இத்தகவலை, திருச்சி மாவட்ட மைய நுாலக முதல் நிலை நுாலகர் தனலெட்சுமி தெரிவித்துள்ளார்.

The post திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி., குரூப் 2, குரூப் 4 மாதிரி தேர்வு appeared first on Dinakaran.

Tags : TNBSC ,Trichy District Central Library ,Trichchi ,DNBSC Group ,TNPSC ,Central Pulagak ,Trichy District ,Trichy District Central Nulagam ,NRIAS Academy ,Ratatary Phoenix Association ,Dinakaran ,
× RELATED மாவட்ட மைய நூலகத்தில் இன்று கருத்தரங்கம்