×
Saravana Stores

குமுளூர் வேளாண் கல்வி நிலையத்தில் மூங்கில் வளர்க்க தொழில்நுட்ப பயிற்சி

 

லால்குடி, அக்.18: லால்குடி வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு மூங்கில் வளர்ப்பு குறித்து தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. லால்குடி வட்டாரம் குமுளூர் வேளாண்மை கல்வி நிலையத்தில் வேளாண்மை துறையின் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், கிராம அளவிலான வேளாண் முன்னேற்ற குழு பயிற்சி நடைபெற்றது. இதில் மூங்கில் வளர்ப்பு சாகுபடி குறித்த தொழில்நுட்பம், மூங்கில் வகைகள், நீர்ப்பாசனம், உரமேலாண்மை, அறுவடை செய்தல், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் செய்தல், ஒப்பந்த சாகுபடி முறை பற்றி பேராசிரியர்கள் விளக்கி கூறினார்.

இதற்கான ஏற்பாட்டினை லால்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுகுமார், கல்வி உதவியாளர் விஜய், உதவி வேளாண்மை அலுவலர்கள் லால்குடி வட்டாரம், அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சபரிசெல்வன், உதவி தொழில்நுட்ப மேலாளர் கார்த்திக் ஆகியோர் செய்து இருந்தனர். இப்பயிற்சியில் லால்குடி வட்டாரத்தை சார்ந்த பல முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர். இறுதியில் பயிற்சியில் கலந்து கொண்டனர்.

The post குமுளூர் வேளாண் கல்வி நிலையத்தில் மூங்கில் வளர்க்க தொழில்நுட்ப பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Kumlur Agricultural Education Centre ,Lalgudi ,Lalgudi Agricultural Extension Centre ,Department of Agriculture ,Lalgudi District ,Kumulur Agricultural Educational Institution ,Dinakaran ,
× RELATED லால்குடி வட்டார பகுதியில் ரூ.23...